Riddles in Tamil with answers – here we have listed some of the popular and funny riddles in Tamil language to keep Tamil audience engaged. Riddles are excellent option to check your knowledge and reasoning skills by solving the problems. Most often, Tamil riddles will help you to know about word formation and other reasoning capabilities.
General Knowledge Riddles in Tamil
General knowledge riddles help you to improve your basic general knowledge and reasoning skills. We have collected riddles in Tamil from various sources to keep our readers engaged.
உலகின் மிகச்சிறிய முட்டையிடும் பரவியினம் எது? | ஹம்மிங் பறவை |
உலகில் அதிக மருத்துவர்கள் உள்ள நாடு எது? | ரஸ்யா |
மிருகங்களில் அதிக ரத்த ஓட்டம் உள்ள பிராணி எது? | ஒட்டகச்சிவிங்கி |
ஜனவரி மாதம் முதலாம் திகதி சுதந்திர தினம் கொண்டாடும் நாடுகளில் ஒன்று? | சூடான் |
உலகில் அதிகமான நாடுகளை கொண்ட கண்டம் எது? | ஆபிரிக்கா |
உலகில் தேங்காய் அதிகளவில் விளைகின்ற நாடு எது? | பிலிப்பைன்ஸ் |
நீர் அருந்தாத நீர் வாழ் உயிரினம் எது? | டால்பின் |
உலகில் அதிக விஷத்தன்மை வாய்ந்த மீன் இனம் எது? | ஸ்டான் பிஷ் |
தலையில் இதயத்தை கொண்டுள்ள மீன் இனம் எது? | இறாள் |
உலகில் அதிக அருங்காட்சியகங்கள் உள்ள நாடு எது? | ஜெர்மனி |
Funny Riddles in Tamil
Comedy riddles help you to improve your comedy senses. You can crack joke with your friends and keep them entertained. Check out the funny quotes.
ஆடி ஆடி நடந்தான், அமைதியாக அதிர வைத்தான் அவன் யார்? | யானை |
உருவத்தில் சிறியவன் உழைப்பில் பெரியவன் அவன் யார்? | எறும்பு |
அடித்தாலும், உதைத்தாலும் அழ மாட்டான் அவன் யார்? | பந்து |
மழையோடு வருகின்ற வெள்ளை புறாவை வெட்டினால் ஒரு சொட்டு இரத்தம் வராது அது என்ன? | ஈசல் |
இருப்பது இரண்டு கால் ஓடுவது குதிரை வேகம் இறக்கை உண்டு பறக்காது அது என்ன? | நெருப்புக் கோழி |
தலை இல்லாதவன் தலையை சுமப்பவன் அவன் யார் ? | தலையணை |
பற்கள் இருக்கும் கடிக்கமாட்டான் அவன் யார்? | சீப்பு |
ஐந்து வீட்டிற்க்கு ஒரு முற்றம் அது என்ன? | உள்ளங்கையும் விரல்களும் |
கண்ணால் பார்க்கலாம் கையால் பிடிக்கமுடியாது அது என்ன? | நிழல் |
காற்றைக் குடித்து காற்றில் பறப்பான் அவன் யார்? | பலூன் |
இலையுண்டு கிளையில்லை, பூ உண்டு மணமில்லை, காய் உண்டு விதையில்லை, பட்டை உண்டு கட்டை இல்லை, கன்று உண்டு பசு இல்லை அது என்ன? | வாழை |
எவ்வளவு முயன்றாலும் அவனை கடிக்க முடியாது. அவன் இல்லாமல் உணவே இல்லை. அவன் யார் ? | தண்ணீர் |
பூ பூக்கும். காய் காய்க்கும். ஆனால் பழம் பழுக்காது. அது என்ன? | தேங்காய் |
இளமையில் பச்சை, முதுமையில் சிகப்பு, குணத்திலே எரிப்பு. விடை தெரியுமா? | மிளகாய் |
தாய் குப்பையிலே, மகள் சந்தையிலே அவை என்ன? | நெல் |
அடிக்காமல், திட்டாமல் கண்ணீரை வரவழைப்பாள் அவள் யார்? | வெங்காயம் |
கண்ணீர் விட்டு வெளிச்சம் தருவாள் அவள் யார்? | மெழுகுவர்த்தி |
நீண்ட உடலிருக்கும் தூணும் அல்ல, உடலில் சட்டை இருக்கும் ஆனால் உயிர் இல்லை, துயிலில் சுகம் இருக்கும் மெத்தை அல்ல அது என்ன? | தலையணை |
இதயம் போல் துடிப்பிருக்கும், இரவு பகல் விழித்திருக்கும். அது என்ன? | கடிகாரம் |
வெயிலில் மலரும், காற்றில் உலரும். அது என்ன? | வியர்வை |
போகும் இடமெல்லாம் கோடு கிழித்திடுவான் – அவன் யார்? | நத்தை |
இருந்தாலும், இறந்தாலும், பறந்தாலும் இறக்கை மடக்காத பட்சி – அது என்ன? | தட்டாம் பூச்சி |
சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன? | கண் |
அச்சு இல்லாத சக்கரம்: அழகு காட்டும் சக்கரம். அது என்ன? | வளையல் |
ஓடியாடித் திரியும் – உடலைத் தேடிக் குத்தும் – அது என்ன? | கொசு |
கனியிலே சிறந்த கனி, என்றுமே திகட்டாத கனி… அது என்ன? | பிள்ளைக்கனி |
கடுகு மடிக்க இலை இல்லை, யானை படுக்க இடமுண்டு- அது என்ன? | சவுக்குமரம் |
நீரிலே பிறப்பான்.. வெயிலிலே வளர்வான்.. நீரிலே இறப்பான்..! அவன் யார்? | உப்பு |
செய்வதைச் செய்யும் குரங்கும் அல்ல; சிங்காரிக்க உதவும் சீப்பும் அல்ல. அது என்ன? | கண்ணாடி |
அக்கா வீட்டுக்குத் தங்கை போவாள்.. ஆனால், தங்கை வீட்டுக்கு அக்கா வரமுடியாது! அது என்ன? | கால் படி, அரை படி |
வீட்டுக்கு வந்த விருந்தாளியை வரவேற்க ஆளில்லை. அது என்ன? செருப்பு
இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. – அது என்ன? சைக்கிள்
ஆழக் குழி தோண்டி அதிலே ஒரு முட்டையிட்டு அண்ணாந்து பார்த்தால் தொண்ணூறு முட்டை அது என்ன ? தென்னை
முட்டையிடும், குஞ்சு பொரிக்காது. கூட்டில் குடியிருக்கும், கூடு கட்டத் தெரியாது. குரலில் இனிமையுண்டு, சங்கீதம் தெரியாது! – அது என்ன? குயில்
அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி, பாதிநாள் குறைவாள், பாதிநாள் வளர்வாள் அது என்ன?நிலா
ஆயிரம் பேர் அணி வகுத்தாலும் ஆரவாரம்அவர்கள் யார்? எறும்புக் கூட்டம்
தாய் குப்பையிலே, மகள் சந்தையிலே அவை என்ன? நெல்
சங்கீதம் பாடுபவனுக்கு சாப்பாடு இரத்தம் அது என்ன? கொசு
வீட்டிலிருப்பான் காவலாலி, வெளியில் சுற்றுவான் அவன் கூட்டாளி, அவர்கள் யார்? பூட்டும் திறப்பும்
காட்டிலே பச்சை; கடையிலே கறுப்பு; வீட்டிலே சிவப்பு. அது என்ன? மரம்–கரி–நெருப்பு.
நடக்கவும் மாட்டேன், நகராமல் இருக்கவும் மாட்டேன் நான் யார்? மணிக்கூடு
மழையோடு வருகின்ற மஞ்சள் புறாவை வெட்டினால் ஒரு சொட்டு இரத்தம் வராது. அது என்ன? ஈசல்
நடந்தவன் நின்றான். கத்தியை எடுத்து தலையைச் சீவினேன். மறுபடி நடந்தான். அவன் யார்? பென்சில்
விரல் இல்லாமலே ஒரு கை. அது என்ன? தும்பிக்கை
கண்ணால் பார்க்கலாம் கையால் பிடிக்கமுடியாது அது என்ன? நிழல்
சட்டையைக் கழற்றினால் சத்துணவு அது என்ன? வாழைப்பழம்
வயதான பலருக்கு புதிதாக ஒரு கை அது என்ன? வழுக்கை / பொக்கை
ஒரு குற்றத்தை செய்ய முயற்சித்தால் தண்டனை உண்டு, ஆனால் குற்றத்தை செய்தால் தண்டிக்க முடியாது, அக் குற்றம் என்ன? தற்கொலை
எவ்வளவு முயன்றாலும் அவனை கடிக்க முடியாது. அவன் இல்லாமல் உணவே இல்லை. அவன் யார் ? தண்ணீர்
கடைசி வார்த்தையில் மானம் உண்டு, முதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன பூச்சிகள். காஞ்சியில் நான் யார்? பட்டுத்துணி
இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்? தேள்
படபடக்கும், பளபளக்கும், பண்டிகை வந்தால் வானில் பறக்கும். அது என்ன ? பட்டாசு
பிடுங்கலாம் நடமுடியாது அது என்ன? தலைமுடி
உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணீந்திருப்பான்? அவன் யார்? வெங்காயம்
காலையிலும் மாலையிலும் நெட்டை மதியம் குட்டை நான் யார்? நிழல்
பல் துவக்ககாதவனுக்கு உடம்பு எல்லாம் பற்கள்?சீப்பு
கடலிலே கலந்து, கரையிலே பிரிந்து, தெருவிலே திரியும் பூ எது? உப்பு
பற்கள் இருக்கும் கடிக்கமாட்டான் அவன் யார்? சீப்பு
வால் நீண்ட குருவிக்கு வாயுண்டு. வயிறில்லை. அது என்ன? அகப்பை
காதை திருகினால் பாட்டு பாடுவான்? அவன் யார்? ரேடியோ
கடல் நீரில் வளர்ந்து , மழை நீரில் மடிவது என்ன ? உப்பு
ஓயாமல் இரையும் இயந்திரமல்ல, உருண்டோடிவரும் பந்து அல்ல அது என்ன? கடல்
நாளெல்லாம் நடந்தாலும் நாற்பதடி செல்லாது அந்த நாயகனுக்கோ உடல் மேல் கவசம் அது என்ன? நத்தை
முறையின்றித் தொட்டால்,ஒட்டிக் கொண்டு உயிரை எடுப்பான் அவன் யார்? மின்சாரம்
நீரிலும் வாழ்வேன், நிலத்திலும் வாழ்வேன். நீண்ட ஆயுள் உடைய எனக்கு இறைவன் கொடுத்த கவசமும் இருக்கு. நான் யார் ? ஆமை
தொப்பொன்று விழுந்தான் தொப்பி கழன்றான் அவன் யார்? பனம்பழம்
மழை காலத்தில் குடை பிடிப்பான், மனிதனல்ல. அவன் யார்? காளான்
ஒரு குகை, 32 வீரர்கள் , ஒரு நாகம் அது என்ன? வாய்
கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்?கரும்பு
Tamil riddles are a question, phrase or statement having double or indirect meaning. Here, answers to the question will be hidden inside the question itself. ஒரு சொற்றொடரில் ஒரு பொருளின் பெயரை மறைமுகமாக வைத்து ஒரு பொருளின் பெயரையோ அல்லது சொற்களையோ கண்டுபிடிப்பதுதான் புதிர் ஆகும். சரி வாருங்கள் புதிர்களை பார்ப்போம். Stay connected with Tamil Typing online for more useful information on Tamil language.